Sanae Takaichi | அதிபர் டிரம்பை சந்தித்தார் ஜப்பான் பிரதமர்

ஜப்பானிய பிரதமர் சனே தகாய்ச்சி அமெரிக்கா சென்றுள்ளார்.
பிரதமர் சனே தகாய்ச்சி, அதிபர் டிரம்ப்
பிரதமர் சனே தகாய்ச்சி, அதிபர் டிரம்ப்
Published on: 

ஈரான்-அமெரிக்கா உடனான மோதலில் பல்வேறு நாடுகளில் எண்ணெய் சதவீத இறக்குமதி கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது.

இதற்கிடையே, ஈரான் உடனான மோதலில் கப்பல்களை அனுப்பி உதவ வேண்டும் என ஜப்பானிடம் அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். அதிபர் டிரம்பின் இந்த நெருக்கடி இரு நாட்டு உறவுகளில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி அமெரிக்கா செல்கிறார் என்றும், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க உள்ளார் என தகவல் வெளியானது.

இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, அங்குள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பொருளாதாரப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் முக்கியமாகப் பேசப்படும் என கூறப்படுகிறது.

ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி கண்டனம் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com