புகைப்படம் எடுக்க கெஞ்சினார் எனக் கூறிய டிரம்பை விளாசிய மெலோனி: இத்தாலி அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு

ஜி-7 மாநாட்டின்போது தன்னுடைய புகைப்படம் எடுத்துக் கொள்ள இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி கெஞ்சினார் என டிரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புகைப்படம் எடுக்க கெஞ்சினார் எனக் கூறிய டிரம்பை விளாசிய மெலோனி: இத்தாலி அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு
Published on

சமீபத்தில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டின்போது, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தன்னிடம் புகைப்படம் எடுக்க கெஞ்சினார் என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கூற்றை இத்தாலிய அரசாங்கம் வெள்ளிக்கிழமை கடுமையாக கண்டித்துள்ளது.

டிரம்பின் கூற்றுகள் மெலோனி மற்றும் ஒட்டுமொத்த இத்தாலி மக்களையும் புண்படுத்தக்கூடியவை என்று கூறிய இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி, இந்த வார இறுதியில் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த தனது பயணத்தை திடீரென ரத்து செய்தார்.

தனது பங்கிற்கு, மெலோனி ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் டிரம்பின் கூற்றுகள் "முற்றிலும் புனையப்பட்டவை" என்று குறிப்பிட்ட அவர், "நானும் இத்தாலியும் கெஞ்சுவதில்லை" என்று கூறியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com