காசா நோக்கி சென்ற படகுகளை இடைமறித்த இஸ்ரேல்: 2 ஆர்வலர்களை பிடித்துச் சென்றது

ஸ்பெயின் நாட்டில் இருந்து காசாவுக்கு உதவிப்பொருட்களுடன் சென்ற படகுகளை வழிமறித்து ஆர்வலர்களிடம் இஸ்ரேல் விசாரணை நடத்தியுள்ளது.
காசா நோக்கி சென்ற படகுகளை இடைமறித்த இஸ்ரேல்: 2 ஆர்வலர்களை பிடித்துச் சென்றது
Published on

இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, தற்போது காசாவுக்கு தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன. அந்த வகையில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட படகுகளில் உதவிப் பொருட்களுடன் 175 ஆர்வலர்கள் பயணம் செய்து வந்தனர். மத்திய தரைக்கடல் சர்வதேச கடல் வழியில் அவர்களை இஸ்ரேல் கடற்படை இடைமறித்தது.

ஆர்வலர்களிடம் விசாரைணை என்ற பெயரில் கேள்விமேல் கேள்வி கேட்டுள்ளது இஸ்ரேல் கடற்படை. பின்னர் அவர்களை விடுவித்துள்ளது. ஆனால், பாலஸ்தீன- ஸ்பெயின் குடியுரிமை பெற்ற சைஃப் அபுகேஷேக் மற்றும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த தியாகோ அவிலா ஆகிய இருவரையும் இஸ்ரேல் தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

அபுகேஷேக் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்யவதாகவும், அவிலா சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும தங்களுக்கு சந்தேகம் உள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com