

லெபனானின் தெற்கில் உள்ளது புகழ்பெற்ற துறைமுக நகர் டைர். இந்த டைர் நகரத்திற்கு அருகில் உள்ள தவுரா கிராமம் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது. இதில் நான்கு பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயம் அடைந்தனர். தென்கிழக்கு கிராமமாக க்ஃபர் சவுபா மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளனர் என லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டைர் மாகாணத்தில் உள்ள 6 கிராம மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தாக்குதல் நடத்தியுள்ளது.
முன்னதாக இஸ்ரேலின் வடக்குப்பதியில் ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு ராக்கெட்டை சுட்டு வீழ்த்தியதாகவும், மற்றவைகள் வெற்று நிலத்தில் வீழ்ந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.