ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாவை ஒழிக்க லெபனான் ஒத்துழைக்க வேண்டும்: இஸ்ரேல் வலியுறுத்தல்

வாஷிங்டனில் நாளை நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழுவை நிராயுதபாணியாக்க இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுமாறு லெபனானுக்கு இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிடியான் சார் அழைப்பு விடுத்தார்.
ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாவை ஒழிக்க லெபனான் ஒத்துழைக்க வேண்டும்: இஸ்ரேல் வலியுறுத்தல்
Published on

ஈரான் ஆதரவு பெற்றி ஹிஸ்புல்லாவை லெபனானில் இருந்து ஒழிக்க இஸ்ரேல், லெபனான் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல்- லெபனான் இடையே பேச்சுவார்த்தை ஏற்பட்டு இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

நீண்டு காலத்திற்குப் பிறகு இஸ்ரேல்- லெபனான் இடையே கடந்த சில தினங்களுக்கு முன் நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது. 2-வது பேச்சுவார்த்தை நாளை வாஷிங்டனில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையிர், லெபனானுடன் எங்களுக்கு எந்தவொரு தீவிரமான கருத்து வேறுபாடுகளும் இல்லை. தீர்க்கப்படக்கூடிய சில சிறிய எல்லை பிரச்சினைகள் உள்ளன என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி கிடியான் சார் தெரிவித்துள்ளார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி மற்றும் இயல்புநிலைக்கு தடையாக இருப்பது ஒன்றுதான்: அது ஹிஸ்புல்லா என்றார்.

வடக்கு இஸ்ரேலை நோக்கிய குறுகிய தூர ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு டாங்க் அச்சுறுத்தலை அகற்றுவதற்காக, இஸ்ரேலிய ராணுவம் தற்போது தெற்கு லெபனானுக்குள் சுமார் 10 கி.மீ (6 மைல்கள்) தொலைவிற்கு ஒரு பாதுகாப்பு மண்டலத்தை (buffer zone) அமைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com