10 பில்லியன் டாலர் மதிப்பில் F-35, F-15IA போர் விமானங்கள் வாங்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

பல தசாப்தங்களுக்கு தங்கள் நாட்டிற்கு எதிரிகளால் அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதிப்படுத்த இஸ்ரேல் அரசு உறுதிப்பூண்டுள்ளது.
10 பில்லியன் டாலர் மதிப்பில் F-35, F-15IA போர் விமானங்கள் வாங்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்
Published on

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ராணுவ தளவாடங்களை அதிகரிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதற்காக 110 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஆயுதங்கள், போர் விமானங்கள் வாங்கி ராணுவ திறன்களை அதிகரிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக 10 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு F-35 Lightning II மற்றும் F-15IA அதிநவீன போர் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இந்த விமானங்களை லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் போயிங் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து வாங்க முடிவு செய்துள்ளது.

இதற்கான ஒப்புதலை இஸ்ரேல் மந்திரிகள் சபை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வருடத்தில் இருந்து 2030-க்குள் இந்த போர் விமானங்கள் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காசா, லெபானா, ஈரான் ஆகிய நாடுகளுடன் இஸ்ரேல் போரிட்டுள்ளது. தங்கங் நாட்டின் அடுத்த பல வருடங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய இஸ்ரேல் உறுதிப்பூண்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com