21 மணி நேர மாரத்தான் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் உடன்படிக்கை ஏற்படவில்லை: ஜே.டி. வான்ஸ் | Islamabad Talks

அமெரிக்கா- ஈரான் இடையிலான நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற்றது.
21 மணி நேர மாரத்தான் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் உடன்படிக்கை ஏற்படவில்லை: ஜே.டி. வான்ஸ் | Islamabad Talks
Published on

அமெரிக்கா- ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் கடந்த 7-ந்தேதி ஏற்பட்டது. அப்போது இரண்டு வாரத்திற்கு இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் ஏற்பாடு செய்தது.

அதன்படி நேற்று அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான அமெரிக்கா பிரதிநிதிகள் மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையே நேரடி பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை 21 மணி நேரம் நீடித்தது. என்றாலும் இறுதியில் எந்த உடன்படிக்கையில் ஏற்படவில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், உடன்பாட்டிற்கு வராமலேயே நாங்கள் அமெரிக்காவிற்கு திரும்புகிறோம். ஈரான் அணு ஆயுதத்தையோ அல்லது அணு ஆயுதத்தை விரைவாகப் பெறுவதற்கு உதவும் கருவிகளையோ நாடாது என்பதற்கான உறுதியான உறுதிமொழி எங்களுக்குத் தேவை. இதுவே எங்களின் இறுதி மற்றும் மிகச்சிறந்த சலுகையாகும். நாங்கள் மிக எளியதொரு முன்மொழிவுடனும், புரிந்து கொள்ளுதலுக்கான ஒரு வழிமுறையுடனும் விடைபெறுகிறோம். ஈரான் இதனை ஏற்றுக்கொள்கிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com