Iraq: பற்றி எரியும் அமெரிக்காவின் Victoria base.. பாக்தாத் சர்வதேச விமான நிலையம் அருகே தாக்குதலால் பரபரப்பு

ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான அஷாப் அல்-கஹ்ஃப் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
Iraq: பற்றி எரியும் அமெரிக்காவின் Victoria base.. பாக்தாத் சர்வதேச விமான நிலையம் அருகே தாக்குதலால் பரபரப்பு
Published on: 

ஈரான் தலைநகர் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் விக்டோரியா பேஸ் எனும் தளவாட மையம் மீது டிரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலால் அமெரிக்கத் தூதரக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. வானத்தை முட்டும் அளவிற்கு எழுந்த கரும்புகை பல கிலோமீட்டர் தூரத்திற்குத் தெரிந்தது.

ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான அஷாப் அல்-கஹ்ஃப் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

சர்வதேச விமான நிலையத்திற்கு மிக அருகில் தாக்குதல் நடந்ததால், பாக்தாத் விமான நிலையத்தின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நிலமை மோசமடைந்து வருவதால், ஈராக்கில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான நேரடி மோதல் தொடங்கியதிலிருந்து, ஈராக்கில் உள்ள அமெரிக்கச் சொத்துக்கள் மற்றும் ராணுவ நிலைகளை ஈரான் ஆதரவு குழுக்கள் குறிவைத்து வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com