

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தற்சமயம் நிறுத்தப்பட்டு உள்ளது.
ஈரானில் போர் நிறுத்தம் அமலில் உள்ள போதிலும் டெஹ்ரானின் பல்வேறு இடங்களில் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டது என ஈரான் அரசு தெரிவித்தது.
இந்நிலையில், டெஹ்ரானில் இருந்து ஈரான் வர்த்தக ரீதியான விமான சேவைகளை மீண்டும் தொடங்கியது.
டெஹ்ரானில் இருந்து இஸ்தான்புல், ஓமனில் உள்ள மஸ்கட் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள மதீனா ஆகிய இடங்களுக்கு விமானங்கள் புறப்பட்டதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
இந்த மாத தொடக்கத்தில் ஈரானின் வான்வெளி பகுதியளவு திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.