அபுதாபியில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்.. 5 இந்தியர்கள் காயம் | UAE

அபுதாபியின் ஸ்வீஹான் சாலையில் இதேபோன்று ஏவுகணை பாகங்கள் விழுந்ததில் 1 இந்தியர் உயிரிழந்தார்.
அபுதாபியில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்.. 5 இந்தியர்கள் காயம்  | UAE
Published on

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் தொடங்கி இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் அபுதாபியில் ஈரான் ஏவுகணை சிதறல்களால் ஐந்து இந்தியர்கள் காயமடைந்துள்ளனர்.

அபுதாபி நகரின் கலீஃபா பொருளாதார மண்டலத்தில் பாதுகாப்புப் படைகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையின் சிதறல்கள் விழுந்ததில் ஐந்து இந்தியர்கள் காயமடைந்துள்ளதாக அபுதாபி அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஐந்து இந்தியக் குடிமக்களுக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் 26 அன்று அபுதாபியின் ஸ்வீஹான் சாலையில் இதேபோன்று ஏவுகணை பாகங்கள் விழுந்ததில் 1 இந்தியர், 1 பாகிஸ்தானியர் உயிரிழந்தனர். மேலும் எமிராட்டி, ஜோர்டான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மூவர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com