

ஈரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. வான்தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா கூடுதலை வீரர்களை குவித்துள்ளது.
ஈரானின் எண்ணெய் வளத்தின் முனையமாக விளங்கும் கார்க் தீவை கைப்பற்ற விரும்புவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கிடையே ஈரான் மீது தரைவழி தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பென்டகன் திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் ஈரானின் புரட்சிகர காவலர் படை ஒரு வீடியோவை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் ராணுவ வீரர் பயிற்சி மேற்கொள்வது போன்றும், வெடிப்பொருட்கள் வெடிப்பது போன்றும் அருகில் வாருங்கள். நாங்கள் காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம் அமெரிக்கா தரைவழி தாக்குதல் நடத்தினாலும், அதை எதிர்கொள்ள தயாராக இருக்கும் என்பதை ஈரான் தெளிவாக தெரிவித்துள்ளது.