Iran War Updates | ஈரானின் அல்போர்ஸ் மாகாணத்தில் வான்தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு வடமேற்கில் உள்ள அல்போர்ஸ் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
Iran War Updates | ஈரானின் அல்போர்ஸ் மாகாணத்தில் வான்தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு
Published on

ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குலில் ஈரானின் முக்கிய தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே இஸ்ரேல் தாக்குதலில் பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தி வரும் தாக்குதலில் தெஹ்ரானுக்கு வடமேற்கில் உள்ள அல்போர்ஸ் மாகாணமும் குறி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாகாணத்தில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதா, ஈரான் அரசுக்கு சொந்தமான மீடியா தெரிவித்துள்ளது. மேலும், 24 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஈரானின் மின்நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com