ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் சமிக்ஞை!

போருக்கான அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு டிரம்ப் “இரண்டு முதல் மூன்று நாட்கள்” அவகாசம் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் சமிக்ஞை!
Published on

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது நடத்தத் திட்டமிட்டிருந்த தாக்குதலை வளைகுடா நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஒத்திவைத்துள்ளார்.

மேலும், ஈரான் உடனான மோதலை அமெரிக்கா "விரைவில் முடிவுக்குக் கொண்டுவரும்" என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துளார்.

அதேநேரம், அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் விதிமுறைகளுக்கு டெஹ்ரான் ஒப்புக்கொள்ள மறுத்தால், தாக்குதலுக்கு "முழுத் தயார் நிலையில்" அமெரிக்கா உள்ளதாகத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் இந்த 72 மணி நேர ராஜதந்திர இறுதி எச்சரிக்கை, வாஷிங்டனையும் தெஹ்ரானையும் ஒரு பெரும் பதற்றமான மோதல் நிலையில் நிறுத்தியுள்ளது.

பொதுவெளியில் பேசிய டிரம்ப், “நாங்கள் அந்தப் போரை மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம். அவர்கள் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள மிகவும் விரும்புகிறார்கள். எண்ணெய் விலைகள் அதலபாதாளத்தில் வீழ்வதை நீங்கள் காண்பீர்கள். அவை கீழே இறங்கும். அங்கே அபரிமிதமான எண்ணெய் இருப்பதால், அவை கீழே சரிந்து வீழ்ந்துவிடும்,” என்று கூறினார்.

இதற்கிடையில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீர்வழியில் ஈரான் தனது சட்டப்பூர்வ உரிமைகளை வலுவாகப் பாதுகாக்கும் என்று ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைவரான இப்ராஹிம் அஜிஸி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கும் நாடுகளை அவர் எச்சரித்ததாகவும், தனது நலன்களைப் பாதுகாப்பதில் தெஹ்ரான் "எந்தவிதமான மென்மையையும்" காட்டாது என்றும் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com