

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து புதிய உச்ச தலைவராக அவரது மகன் மொஜ்தபா கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் அவர் இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது பெயரில் அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் மொஜ்தபா கமேனி, சுயநினைவின்றி இருக்கும் நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மொஜ்தபா கமேனி, ஈரானின் கோம் நகரில் சுய நினைவின்றி உள்ள நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என்ற ஒரு உளவுத்துறை தகவலின் அடிப்படையில் டைம்ஸ் யு.கே செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அதில் ஆட்சி நிர்வாகத்தில் மொஜ்தபா கமேனி பங்கேற்க இயலாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனியின் உடல் கோம் நகரில் அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.