Iran War Updates | டிரம்பின் போர் நிறுத்த பரிந்துரையை நிராகரித்த ஈரான்

டிரம்பின் போர் நிறுத்த பரிந்துரையை நிராகரித்த ஈரான், 10 கோரிக்கைகள் அடங்கிய திட்டத்தை முன்வைத்துள்ளது.
Iran War Updates | டிரம்பின் போர் நிறுத்த பரிந்துரையை நிராகரித்த ஈரான்
Published on

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு 24 மணி நேர இறுதிக்கெடு விதித்தார். ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும். போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லை என்றால் ஈரானின் மின் நிலையங்கள், பாலங்களுக்கான நாளான செவ்வாய்க்கிழமை (இந்திய நேரப்படி இன்று இரவு) அமையும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் ஈரான், அமெரிக்காவின் போர் நிறுத்த பரிந்துரையை நிராகரித்துள்ளது. அத்துடன் பாகிஸ்தான் மூலம் 10 அம்சங்கள் அடங்கிய திட்டத்தை வழங்கியுள்ளது. அதில் போர் நிறுத்தம் தேவை. அதற்கு திட்டவட்டமான முடிவு அவசியம். ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்தை நெறிப்படுத்தும் நெறிமுறை தேவை, தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளது.

இதற்கிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திடவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com