அயதுல்லா காமேனி இறுதிச் சடங்கு.. காண்போரை உலுக்கிய பேத்தியின் சவப்பெட்டி!

இமாம் ரெசா நினைவிடத்தில் முறைப்படி நல்லடக்கம் செய்யப்படவுள்ளன.
அயதுல்லா காமேனி இறுதிச் சடங்கு.. காண்போரை உலுக்கிய பேத்தியின் சவப்பெட்டி!
Published on

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்திய திடீர் தாக்குதலில் அப்போதைய ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

அலி கமேனியுடன் சேர்த்து, அவரது மூத்த மகள், மருமகன், மருமகள் மற்றும் அவரது 14 மாதப் பேத்தி ஜஹ்ரா ஆகிய அனைவரும் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து போர் வெடித்த நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக அவர்களின் இறுதிச்சடங்கு கடந்த 4 மாதங்களாக நடைபெறவில்லை.

குளிரூட்டப்பட்ட ரகசிய அறையில் அவர்கள் உடல்கள் பாதுகாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அஞ்சலி

தற்போது போர்ப் பதற்றங்கள் சற்றுத் தணிந்து, அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள சூழலில் இறுதிச்சடங்குகள் முறைப்படி நடக்கிறது.

தலைநகர் தெஹ்ரானில் நேற்று இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தொடங்கின. யாரும் நாட்களில் பல்வேறு நகரங்களுக்கு அவர்களது உடல்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஜூலை 9 அன்று மஷ்ஹாரில் உள்ள இமாம் ரெசா நினைவிடத்தில் முறைப்படி நல்லடக்கம் செய்யப்படவுள்ளன.

தெஹ்ரான் இமாம் கமேனி கிராண்ட் மொசல்லா வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டிகளின் முன்னிலையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த வருகை தரத் தொடங்கியுள்ளனர்.

சவப்பெட்டி

அங்கு வந்திருந்த அனைவரின் நெஞ்சையும் உலுக்கிய ஒரு காட்சி, கமேனியின் 14 மாதப் பேத்தியான ஜஹ்ரா முகமது கோல்பயேகானியின் சிறிய சவப்பெட்டிதான்.

போரின் கொடூரத்தையும், அது ஏற்படுத்தும் மனித உயிர் இழப்புகளையும் இந்தத் துயரக் காட்சி உலகிற்குப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

ஈரான் தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட பெரிய சவப்பெட்டிகளுக்கு நடுவே, அதே தேசியக் கொடியால் போர்த்தப்பட்டிருந்த அந்தச் சிறு குழந்தையின் சிறிய சவப்பெட்டி அஞ்சலி செலுத்த வந்தவர்களின் இதயங்களை உரைய வைத்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com