

இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக இருவரை ஈரான் தூக்கிலிட்டு தண்டனை நிறைவேற்றியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகள் இணைந்து கடந்த வருடம் அணுஆயுதம் செறிவூட்டும் ஆலை மீது தாக்குதல் நடத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
அமெரிக்கா- ஈரான் இடையிலான போரில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமெனி கொல்லப்பட்டார். மேலும், பல தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த போரில் இஸ்ரேலுக்கு பலர் உளவாளியாக செயல்பட்டதாக ஈரான் சந்தேகித்தது. அதன்அடிப்படையில் பலரை கைது செய்து தண்டித்து வருகிறது.
அந்த வகையில் உளவு பார்த்ததாக யாகோப் கரிம்போர் மற்றும நாசர் பெக்ர்ஸாதே ஆகியோருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
யாகோப் இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை ஏஜென்சிக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. பெக்ர்ஸாதே அரசாங்கம் மற்றம் மதத் தலைவர்கள் குறித்தும், நடான்ஸ் (அணுசக்தி திட்டம் இருக்கும் இடம்) குறித்தும் தகவல் அனுப்பியதாக குற்றம்சாட்டியுள்ளது.
ஈரான் உச்சநீதிமன்றம் இருவரிடன் தண்டனையை உறுதி செய்த நிலையில், தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.