தந்தையின் சவப்பெட்டி முன் கதறி அழுத அயதுல்லா காமேனி மகன்கள்.. 'டிரம்ப் ஒழிக' என ஈரான் மக்கள் கோஷம்

ஜூலை 9ஆம் தேதி அவரது சொந்த ஊரான மஷ்ஹத்தில் உள்ள இமாம் ரெஸா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
தந்தையின் சவப்பெட்டி முன் கதறி அழுத அயதுல்லா காமேனி மகன்கள்.. 'டிரம்ப் ஒழிக' என ஈரான் மக்கள் கோஷம்
Published on

அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்கு தெஹ்ரானில் நடைபெற்று வருகிறது.

இன்று, லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த தெஹ்ரான் வீதிகளிலும், பெரிய மசூதி வளாகத்திலும் திரண்டனர்.

தங்கள் கோபத்தை "அமெரிக்காவுக்கு அழிவு", "டிரம்ப்பை வீழ்திவோம்" மற்றும் "இஸ்ரேலுக்கு அழிவு" என்று பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

இதனிடையே காமேனியின் மூன்று மகன்களான முஸ்தபா, மெசம் மற்றும் மசூத் ஆகியோரும், மூத்த அதிகாரிகளும், ராணுவப் பிரமுகர்களும் தெஹ்ரானில் நடந்த பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர்.

தங்கள் தந்தையின் சவப்பெட்டியைக் கண்டதும் மகன்கள் கண்ணீர் விட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மற்றொரு மகனும் ஈரானின் தற்போதைய உச்ச தலைவருமான மொஜ்தபா காமேனி, பாதுகாப்பு காரணங்களுக்காக இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை.

பின்னணி

36 ஆண்டுகள் ஈரானை ஆண்ட காமேனி, இந்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்க தாக்குதளில் கொல்லப்பட்டார். அலி கமேனியுடன் சேர்த்து, அவரது மூத்த மகள், மருமகன், மருமகள் (மொஜ்தபாவின் மனைவி) மற்றும் அவரது 14 மாதப் பேத்தி ஜஹ்ரா ஆகிய அனைவரும் கொல்லப்பட்டனர்.

அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த வாரம் புரிந்துணர்வு எட்டப்பட்ட நிலையில் கடந்த 6 மாதங்களாக பதப்படுத்தப்பட்ட அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட பிரமாண்ட இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பேத்தி ஜஹ்ரா
பேத்தி ஜஹ்ரா

நேற்று தொடங்கிய இறுதிச் சடங்கு, ஆறு நாட்கள் நீடிக்கும். புனித நகரங்கள் வழியாக அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு ஜூலை 9ஆம் தேதி அவரது சொந்த ஊரான மஷ்ஹத்தில் உள்ள இமாம் ரெஸா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com