12 இந்திய மாலுமிகள் சென்ற கப்பல் மீது ஈரான் தாக்குதல்

கப்பல் சென்று கொண்டிருந்தபோது, ஈரான் ஆயுதப் படைகள் அதனை வழிமறித்தன.
12 இந்திய மாலுமிகள் சென்ற கப்பல் மீது ஈரான் தாக்குதல்
Published on

ஓமன் வளைகுடா அருகே 12 இந்திய மாலுமிகளுடன் சென்ற MT Siron என்ற எண்ணெய் டேங்கர் கப்பல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது

Togo நாட்டுப் கொடியுடன் சென்ற MT Siron கப்பல் கடந்த சனிக்கிழமை, ஓமன் நாட்டின் ஷினாஸ் துறைமுகத்திற்கு அருகே இந்தக் கப்பல் சென்று கொண்டிருந்தபோது, ஈரான் ஆயுதப் படைகள் அதனை வழிமறித்தன.

எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஈரானியப் படைகள் கப்பலை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தின. இச்சம்பவத்தை இந்தியத் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இந்தக் கப்பலில் மொத்தம் 12 இந்திய மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர்.

இந்திய மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அமைச்சகத்தின் இயக்குனர் மந்தீப் சிங் ரந்தவா தெரிவித்துள்ளார்.

இணைந்து இந்திய மாலுமிகள் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக ரந்தவா கூறியுள்ளார்.

இதற்கு முன்பும் இரண்டு இந்தியக் கப்பல்கள் இதேபோன்று தாக்கப்பட்டபோது இந்தியா தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com