

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இதனால் அமெரிக்கா ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களை முற்றுகையிடுவதாக தெரிவித்தது. இதனால் உலக நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டில் திண்டாடி வருகிறது.
இநத் நிலையில்தான் 3 நாள் பயணமாக டிரம்ப் சீனா சென்றார். இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். டொனால்டு டிரம்ப் விடுத்த அழைப்புக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆதரவு தெரிவித்தார். அதேவேளையில் டிரம்பின் ஹார்முஸ் ஜலசந்தியை ராணுவமயமாக்குதல் திட்டத்திற்கு ஜி ஜின்பிங் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், ஈரான் 30 கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் திறந்தே உள்ளது. ஆனால், இந்நீர்வழி வழியாகச் செல்லும்போது அவை ஈரானிய கடற்படைப் படைகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி தெரிவித்துள்ளார்.