இந்தியாவுக்கு நம்பகமான எனர்ஜி சப்ளையராக இருப்போம் என கத்தார் உறுதி

இந்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக கத்தார் சென்று, அங்குள்ள அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியாவுக்கு நம்பகமான எனர்ஜி சப்ளையராக இருப்போம் என கத்தார் உறுதி
Published on

இந்தியாவிற்கு இயற்கை எரிவாயு உள்ளிட்டவைகளை வழக்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக கத்தார் விளங்கி வருகிறது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியதால், ஈரான் பதிலடியாக கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் எரிசக்தி உற்பத்தி பாதிக்கப்பட்டது. கத்தார் வெளிநாடுகளுக்கு விநியோகம் செய்யும் எரிபொருள் சேவை தடைபட்டது.

தற்போது அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டு நாள் பயணமாக இந்திய எண்ணெய் மற்றும் கியாஸ் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கத்தார் சென்றார். அங்கு கத்தாரின் எனர்ஜி மற்றும் கத்தார் எனர்ஜி சிஇஓ சாத் ஷரிதா அல்-காபியை சந்தித்தார்.

அப்போது "கத்தார் தொடர்ந்து இந்தியாவுக்கு நம்பகமான எனர்ஜி சப்ளையராக இருக்கும். எனர்ஜி தொடர்பான நட்பு மற்று ஒத்துழைப்பை இந்தியாவுடன் தொடரவும், வலுப்படுத்தவும் எதிர்நோக்கி இருபப்தாக கத்தார் அமைச்சர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com