உலகிலேயே அதிக மாசு கொண்ட நாடுகளில் இந்தியாவுக்கு 6 ஆம் இடம்.. எந்த நகரில் அதிக பாதிப்பு தெரியுமா?

உலகிலேயே மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட நகரமாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் லோனி நகரம் முதலிடத்தில் உள்ளது.
உலகிலேயே அதிக மாசு கொண்ட நாடுகளில் இந்தியாவுக்கு 6 ஆம் இடம்.. எந்த நகரில் அதிக பாதிப்பு தெரியுமா?
Published on

உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் 'ஐக்யூ ஏர்' (IQAir) நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலக காற்று தர அறிக்கையை அண்மையில் வெளியிட்டது.

சுமார் 143 நாடுகள் மற்றும் 9,446 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் , காற்றில் உள்ள நுண்துகள்களின் அளவை வைத்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாடுகள்:

அதன்படி உலகிலேயே மிக மோசமான காற்று தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து வங்கதேசம், தஜிகிஸ்தான், சாட் மற்றும் காங்கோ ஆகிய நாடுகள் உள்ளன. 6வது இடத்தில் இந்தியா உள்ளது.

நகரங்கள்:

பட்டியலின்படி, உலகிலேயே மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட நகரமாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் லோனி நகரம் முதலிடத்தில் உள்ளது.

லோனியின் மாசு அளவு கடந்த ஆண்டை விட 23% அதிகரித்துள்ளது. இது உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த அளவை விட 22 மடங்கு அதிகமாகும்.

உலகளவில் மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட நான்காவது நகரமாக டெல்லி உள்ளது.

இப்படி மாசுள்ள டாப் 10 அதிக மாசுள்ள நகரங்களில் 5 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. லோனி, டெல்லியை தொடர்ந்து பைர்னிஹாட், காசியாபாத் ஆகியவையும் டாப் 10 பட்டியலில் உள்ளது.

அதேபோல் உலகின் டாப் 25 மாசுள்ள நகரங்களில் முக்கால்வாசி நகரங்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனாவிலேயே அமைந்துள்ளன.

காரணம்:

தொழிற்சாலை கழிவுகள், வாகனப் புகை மற்றும் கட்டுமானப் பணிகளால் ஏற்படும் தூசுகள் ஆகியவை இந்தியாவின் வட மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரிக்க முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இதனால் சுவாசக் கோளாறுகள் மற்றும் இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படும் அபாயம் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com