

இந்தியாவிற்கும் லாவோஸிற்கும் இடையிலான 70 ஆண்டுகால ராஜதந்திர உறவைக் கொண்டாடும் விதமாக, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தை பெருக்கவும், இணையவழி மோசடிகளை வேரறுக்கவும் இருதரப்பும் கைகோர்த்துள்ளன.
இந்தியாவுக்கு முதன்முறையாக அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள லாவோஸ் நாட்டின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான தோங்சவான் போம்விஹேன், செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இந்த முக்கிய விபரங்களைப் பகிர்ந்துள்ளார்.
தென்கிழக்கு ஆசியாவில் வேகமாகப் பரவி வரும் ஆன்லைன் நிதி மோசடிகள் மற்றும் 'சைபர் அடிமைத்தனம்' ஆகியவற்றை ஒடுக்குவது லாவோஸ் நாட்டின் முதன்மை இலக்காகும்.
போலி கணினி நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இரு நாட்டு குடிமக்களையும் பாதுகாக்க, புதுடெல்லியுடன் இணைந்து வலுவான கூட்டு நடவடிக்கைகளை எடுக்க லாவோஸ் முழு சம்மதம் தெரிவித்துள்ளது.
அண்டை நாடுகளின் உதவியுடன் லாவோஸில் இயங்கி வந்த பல மோசடி மானியங்கள் ஏற்கனவே வெற்றிகரமாக ஒடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்தியா - லாவோஸ் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மிகவும் குறைந்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த இரண்டாவது வணிக கூட்டமைப்பின் மூலம் வர்த்தகம், வணிகம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இருக்கும் பிரமாண்டமான வாய்ப்புகளைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
தற்போதைய புவிசார் அரசியல் சூழல் கணிக்க முடியாத நிலையில் உள்ளதால் பேச்சோடு நிறுத்தாமல் உறுதியான முடிவுகளை எடுப்போம் என்றும் வலியுறுத்திள்ளார்.
உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மஹாலை நேரில் சென்று பார்வையிட்ட அவர், இந்த கட்டிட கலைக்கு பின்னால் இருக்கும் அறிவியல் மற்றும் பொறியியல் நுட்பங்கள் தன்னை வியக்க வைக்கிறது. இதை பார்க்கும் பொது உண்மையாகவே அற்புதமாக இருக்குறது என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.