Hormuz ஜலசந்தியில் பாதுகாப்பான பயணத்துக்கு ஒத்துழைக்க தயார்: பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு

ஈரான் உடனான போரை நேட்டோ நாடுகள் சட்டவிரோதமாக கருதுகின்றன.
Hormuz ஜலசந்தியில் பாதுகாப்பான பயணத்துக்கு ஒத்துழைக்க தயார்: பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
Published on

ஈரான் உடனான போரில் ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பதில் நேட்டோ நாடுகள் உதவ மறுப்பது முட்டாள்தனமான தவறு என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

ஈரான் உடனான இந்தப் போரை நேட்டோ நாடுகள் சட்டவிரோதமாக கருதுகின்றன.

இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான பயணத்திற்கு பங்களிக்க இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தயாராக உள்ளன.

சர்வதேச கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் இத்தகைய குறுக்கீடுகளும், உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் சீர்குலைவும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகின்றன.

கப்பல் போக்குவரத்து சுதந்திரம் என்பது சர்வதேச சட்டத்தின் ஒரு அடிப்படைக் கொள்கையாகும். ஈரானின் நடவடிக்கைகளின் விளைவுகள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களால், குறிப்பாக மிகவும் நலிவடைந்த மக்களால் உணரப்படும் என தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com