உக்ரைனுக்கான இயற்கை எரிவாயு சப்ளை நிறுத்தப்படும்: ஹங்கேரியின் நடவடிக்கைக்கு காரணம் என்ன?

ரஷியாவில் இருந்து பைப் லைன் வழியாக எண்ணெய் சப்ளை மீண்டும் தொடங்குவரை உக்ரைனுக்கான இயற்கை எரிவாயு படிப்படியாக குறைக்கப்படும் என ஹங்கேரி தெரிவித்துள்ளது
உக்ரைனுக்கான இயற்கை எரிவாயு சப்ளை நிறுத்தப்படும்: ஹங்கேரியின் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
Published on

ரஷியா- உக்ரைன் இடையிலான போர் கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. 4 ஆண்டுகள் முடிவடைந்து ஐந்தாவது ஆண்டாக இந்த போர் நீடித்து வருகிறது. தற்போது இரு நாடுகளும் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக எண்ணெய் வளங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது

ரஷியாவில் இருந்து பைப் லைன் மூலம் ஹங்கேரிக்கு எண்ணெய் சென்று கொண்டிருந்தது. இநத் பைப்லைன் உக்ரைன் வழியாக செல்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் எண்ணெய் சப்ளை செய்யும் பைப்லைன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பைப் லைன் சேதம் அடைந்துள்ளது. இந்த தாக்குதலை ரஷியாதான் நடத்தியது என்று உக்ரைன் குற்றம்சாட்டுகிறது. இதனால் ஹங்கேரிக்கு என்ணெய் செல்லும் பாதை தடைப்பட்டு உள்ளது. தொழில் நுட்பம் மற்றும் தாக்குதல் நடத்தப்படும் அச்சத்தில் சரி செய்ய பணியில் தடை ஏற்பட்டுள்ளது. இதற்கு உக்ரைன்தான் காரணம் என ஹங்கேரி குற்றம்சாட்டி வருகிறது

இந்த நிலையில் உக்ரைனுக்கு வழங்கும் இயற்கை எரிவாயுவை படிப்படியாக தடை செய்வோம் என்று ஹங்கேரி தெரிவித்துள்ளது. ரஷியாவில் இருந்து மீண்டும் ஆயில் சப்ளை ஹங்கேரிக்கு வரும் வரை உக்ரைனுக்கான இயற்கை எரிவாயு சப்ளை படிப்படியாக நிறுத்தப்படும் என ஹங்கேரி தெரிவித்துள்ளது இதனால் உக்ரைனில் எரிவாற தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் இறக்குமதி செய்யும் இயற்கை எரிவாயுவில் 40 சதவீதம் ஹங்கேரி வழியாக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com