பிடித்த வேலைக்காக ரூ.83 லட்சம் சம்பளத்தை உதறிய பெண்

தனக்கு பிடித்த வேலை செய்வதற்காக ரூ.83 லட்சம் சம்பளம் கிடைத்த வேலையை உதறிவிட்டு பிரான்சுக்கு சென்றார். ஒரு கிராமத்தில் இயங்கி வரும் உணவகத்தில் பேஸ்ட்ரி உதவியாளராக பணியாற்ற தொடங்கினார்.
பிடித்த வேலைக்காக ரூ.83 லட்சம் சம்பளத்தை உதறிய பெண்
Published on

அமெரிக்காவை சேர்ந்த பெண் வலேரி வால்கோர்ட். இவர் கூகுள், அமேசான் போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியவர். அப்போது இவர் ரூ.83 லட்சம் சம்பளம் வாங்கி உள்ளார். ஆனாலும் தான் பார்த்த வேலையில் அவருக்கு போதிய திருப்தி கிடைக்கவில்லை.

இதனால் அவர் தனக்கு பிடித்த வேலை செய்வதற்காக ரூ.83 லட்சம் சம்பளம் கிடைத்த வேலையை உதறிவிட்டு பிரான்சுக்கு சென்றார். அங்குள்ள ஒரு கிராமத்தில் இயங்கி வரும் உணவகத்தில் பேஸ்ட்ரி உதவியாளராக பணியாற்ற தொடங்கினார். அதில் அவருக்கு ரூ.25 லட்சம் வரை மட்டுமே சம்பளமும், வருடத்திற்கு ஊதியத்துடன் கூடிய 5 வார விடுமுறையும் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து வலேரி கூறுகையில், முன்பை விட தற்போது குறைவான சம்பளம் என்பது எப்போதும் எனக்கு வருத்தத்தை தந்ததில்லை. அமெரிக்காவில் இருந்ததை விட நான் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த நாட்டின் கலாச்சாரம், எனது ஓய்வு நேரம் என நான் இங்கு மகிழ்ச்சியாக உள்ளேன் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com