அமெரிக்க போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்.. அமீரகம் மீது டிரோன் தாக்குதல்

அமெரிக்கக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்த நாடு "பூமியிலிருந்தே துடைத்தெறியப்படும்" என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்க போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்.. அமீரகம் மீது டிரோன் தாக்குதல்
Published on

ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கும் அமெரிக்காவின் 'Project Freedom' நடவடிக்கைக்குப் பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.

ஈரானில் இருந்து ஏவப்பட்ட 15 ஏவுகணைகள் மற்றும் 4 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலை துரோகம் என்று வர்ணித்துள்ள அமீரக அரசு, இதற்குப் பதிலடி கொடுக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாக எச்சரித்துள்ளது.

சவூதி அரேபியா இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், அமீரக நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல் தாக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க போர் கப்பல் மீது ஏவுகணை வீச்சு:

இதற்கிடையே திங்களன்று, அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்திக்குள் நுழைவதை ஈரான் கடற்படை தடுத்தது.

ஈரானின் எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததைத் தொடர்ந்து, ஜாஸ்க் தீவுக்கு அருகே ஒரு அமெரிக்கப் போர்க்கப்பலை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜஸ்கி துறைமுகத்திற்கு அருகே, அதாவது ஜஸ்கி நீரிணையின் தெற்கு நுழைவாயிலுக்கு அருகில் சென்றுகொண்டிருந்த ஒரு போர்க்கப்பல் மீது இரண்டு ஏவுகணைகளை வீசிய பின்னர், அந்தக் கப்பல் திரும்பிச் சென்றது என்றும் ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கடந்து செல்ல முயற்சிக்க வேண்டாம் என்று ஈரானின் ஆயுதப் படைகள் பல வெளிநாட்டுக் கப்பல்களை எச்சரித்திருந்ததாக மேலும் அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா மறுத்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்களின் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்க முயன்ற ஈரானின் 6 சிறிய படகுகளை அமெரிக்க ராணுவம் மூழ்கடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் ஈரான் இதை மறுத்துள்ளது.

அமெரிக்கக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்த நாடு "பூமியிலிருந்தே துடைத்தெறியப்படும்" என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com