ஷேக் ஹசீனா தொடர்ந்து இந்தியாவில் இருக்க வேண்டுமென்றால்... எச்சரிக்கும் முகமது யூனுஸ்

வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.இந்தியாவில் இருந்கொண்டு கருத்து தெரிவிப்பதை நல்லதல்ல எனக்கிறார் முகமது யூனுஸ்.
ஷேக் ஹசீனா தொடர்ந்து இந்தியாவில் இருக்க வேண்டுமென்றால்... எச்சரிக்கும் முகமது யூனுஸ்
Published on

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் உள்ளார்.

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள அவர் எங்கு இருக்கிறார் எனத் தெரியவில்லை. ஆனால் அடிக்கடி அரசியல் கருத்து தெரிவித்து வருகிறார். அவர் மீது வங்கதேச இடைக்கால அரசு கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து அவர் இந்தியாவில் இருக்க விரும்பினால் அமைதியாக இருக்க வேண்டும் என முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முகமது யூனுஸ் கூறியதாவது:-

வங்கதேச அரசு அவரை திரும்ப அழைக்கும் வரை, இந்தியா தொடர்ந்து அவரை வைத்திருக்க விரும்பினால், அவர் அமைதியாக இருக்க வேண்டும். இது நிபந்தனையாக இருக்கும்.

இந்தியாவில் இருந்து கருத்து தெரிவிப்பது நட்பற்ற சைகையாகும். இந்தியாவில் இருந்து அவர் கருத்து தெரிவிப்பது யாருக்கும் வசதியானது அல்ல. ஏனென்றால் அவரை நாங்கள் மீண்டும் வங்கதேசத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். அவர் இந்தியாவில் இருக்கிறார், சில சமயங்களில் அவர் கருத்து தெரிவிக்கிறார். இது பிரச்சனையாக இருக்கிறது.

அவர் அமைதியாக இருந்திருந்தால் நாங்கள் மறந்திருப்போம். அவர் தன் சொந்த உலகத்தில் இருந்திருப்பார் என மக்கள் அதை மறந்திருப்பார்கள். ஆனால் இந்தியாவில் அமர்ந்து கொண்டு, பேசிக்கொண்டு இருப்பதோடு அறிவுரைகள் கொடுத்து வருகிறார். இது யாருக்கும் பிடிக்காது.

,இவ்வாறு முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com