பாகிஸ்தானில் கொடூரம்: பேருந்து பயணிகள் 23 பேர் சுட்டுக்கொலை

பயங்கரவாதிகள் 10 வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
பாகிஸ்தானில் கொடூரம்: பேருந்து பயணிகள் 23 பேர் சுட்டுக்கொலை
Published on

கராச்சி:

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேருந்துகளில் பயணித்தவர்களை தடுத்து நிறுத்திய பயங்கரவாதிகள் அவர்களை இறக்கிவிட்டு அவர்களின் அடையாளங்களைச் சரிபார்த்த நிலையில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பலுசிஸ்தானின் முசாகெல் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது. மேலும் பயங்கரவாதிகள் 10 வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

இந்த கொடூர சம்பவத்துக்கு பலுசிஸ்தான் முதல்வர் சர்பராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com