San Francisco நகரில் இலவச இந்திய மாம்பழம்

"இது நான் சுவைத்த சிறந்த மாம்பழம்" என்றும், "அற்புதமான சூழல் மற்றும் மகிழ்ச்சியான அனுபவம் என கூறினர்"
san fransico free mangos celebration
Published on

அமெரிக்காவின் San Francisco நகரில் நடைபெற்ற இலவச இந்திய மாம்பழ சுவை அறிமுக விழா பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அல்போன்சோ. கேசர், சௌன்சா உள்ளிட்ட இந்தியாவின் பிரபல மாம்பழ வகைகளை சுவைக்க நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர். இந்நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த மாம்பழ விழாவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்ஷில் படேல் மற்றும் அவரது நண்பர்கள் ஏற்பாடு செய்தனர். இந்திய மாம்பழங்களின் தனித்துவமான சுவையை அமெரிக்க மக்களிடம் அறிமுகப்படுத்துவதோடு, இந்திய சமூகத்தினருக்குள் கலாச்சார ஒற்றுமையையும் வளர்ப்பதே இதன் நோக்கமாகும்.

இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் சுமார் 1,000 இந்திய மாம்பழங்கள் இலவசமாக வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னார்வலர்கள் மாம்பழங்களை தோல் நீக்கி, துண்டுகளாக வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். பெரும் கூட்டம் காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடமும் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர், "இது நான் சுவைத்த சிறந்த மாம்பழம்" என்றும், "அற்புதமான சூழல் மற்றும் மகிழ்ச்சியான அனுபவம்" என்றும் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவுகளே விழாவை உலகளவில் கவனிக்க வைத்துள்ளன.

அமெரிக்காவில் இந்திய மாம்பழங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறுகிய காலத்திற்கு மட்டுமே இறக்குமதி செய்யப்படுவதாலும், தனித்துவமான இனிப்பு சுவையாலும் அல்போன்சோ மற்றும் கேசர் மாம்பழங்கள் அங்கு உயர்தர பழங்களாக கருதப்படுகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com