பனாமா கால்வாய் பாலம் அருகே வெடிவிபத்து

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பனாமா கால்வாய் பாலம் அருகே வெடிவிபத்து
Published on

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் கரீபியான் கடல்-பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றை இணைக்கும் பனாமா கால்வாய் உள்ளது.

இந்த நிலையில் பனாமா கால்வாய் அருகே உள்ள பாலத்திற்கு கீழ் உள்ள பால்போவா எண்ணெய் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த எரிபொருள் தொட்டிகள் வெடித்து சிதறின. அங்கு பெரும் தீப்பிழம்பு எழும்பியது. இதனால் அந்த பாலம் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 2 பேர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பிரிட்ஜ் ஆப் தி அமெரிக்காஸ் என்ற இந்த பாலம் 1654 மீட்டர் நீளமுள்ள ஒரு முக்கிய சாலையாகும். இது பனாமா கால்வாயின் பசிபிக் நுழைவாயிலின் குறுக்கே அமைந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com