

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையிலான பொருளாதார இடைவெளி அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில், வளர்ந்து வரும் நாடுகளின் முன்னேற்றத்திற்காக ஆண்டுதோறும் 4 டிரில்லியன் டாலர் கூடுதல் முதலீடு தேவைப்படும் நிலையில், உலக வல்லரசுகள் நிதி உதவி வழங்குவதிலிருந்து பின்வாங்குவது நெருக்கடியைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட 25 வளர்ந்த நாடுகள் வழங்கி வந்த வளர்ச்சி உதவித் தொகையில் 23% சரிவு ஏற்பட்டுள்ளது. இது வரலாற்றிலேயே மிக அதிகமான வருடாந்திர வீழ்ச்சியாகும்.
குறிப்பாக, அமெரிக்கா மட்டும் தனது வெளிநாட்டு உதவியில் 59% குறைத்துள்ளது.
நடப்பு ஆண்டில் இந்த நிதி மேலும் 5.8 சதவீதம் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அறிக்கை எச்சரிக்கிறது.
டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் விதித்துள்ள அதிகப்படியான இறக்குமதி வரிகள், ஏழை நாடுகளின் ஏற்றுமதித் துறையைப் பெரிதும் பாதித்துள்ளன.
ஏழை நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கான வரி 9%-லிருந்து 28%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துள்ளது.
இந்தச் இக்கட்டான சூழலைச் சமாளிக்க, உலக வங்கி, சா்வதேச நிதியம் போன்ற சா்வதேச நிதி அமைப்புகளில் உடனடியாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.