ரஷியாவின் குரில் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின.
ரஷியாவின் குரில் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Published on

ரஷியாவின் கிழக்கு பகுதியில் குரில் தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது. 142 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com