கிரீன் கார்டு விண்ணப்ப முறையில் அதிரடி மாற்றம்- அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அதிர்ச்சி

அமெரிக்காவில் குடியுரிமையை பெறும் வெளி நாட்டவர்களில் இந்தியர்கள் முன்னணியில் உள்ளனர்.
கிரீன் கார்டு விண்ணப்ப முறையில் அதிரடி மாற்றம்- அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அதிர்ச்சி
Published on

அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிய எச்1-பி விசா வழங்கப்படுகிறது. அதேபோன்று பல தற்காலிக விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விசா நடைமுறையில் அதிபர் டிரம்ப் கடும் கட்டுபாடுகளை விதித்து உள்ளார்.

இந்த நிலையில் நிரந்தர குடியுரிமைக்காக கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்க புதிய விதியை டிரம்ப் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

அமெரிக்காவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் அந்நாட்டின் நிரந்தரக் குடியுரிமைக்கான கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள். இதில் விண்ணப்பிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுவரை வெளிநாட்டினர் அமெரிக்காவில் இருந்து கொண்டே கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து வந்தனர். தற்போது புதிய விதிகளின்படி அமெரிக்காவிற்குள் இருந்தவாறே விண்ணப்பிப்பதற்கு பதிலாக, தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரீன் கார்டு பெற விரும்பும் வெளிநாட்டினர் இனி அமெரிக்காவிற்குள் இருந்துகொண்டு விண்ணப்பிக்க முடியாது என்றும், முதலில் தங்களின் சொந்த நாட்டுக்கே திரும்ப வேண்டும் என்றும் டிரம்ப் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதற்கான விண்ணப்பம் மற்றும் சரிபார்ப்பு நடை முறைகள் அனைத்தும் விண்ணப்பதாரரின் சொந்த நாட்டில் இருந்தே முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கிரீன் கார்டு விண்ணப்ப பரிசீலனை அவரவர் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் மேற்கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் குடியுரிமையை பெறும் வெளி நாட்டவர்களில் இந்தியர்கள் முன்னணியில் உள்ளனர். தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகள் இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

X

Maalai Malar
www.maalaimalar.com