

ஈரானின் மின்நிலையங்கள், பாலங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ள நிலையில் இஸ்ரேலும் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பாரசீக மொழியில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:-
ஈரான் மக்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரெயில்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிவித்து உள்ளது.