மனைவியிடம் விமானத்தில் அடிவாங்கிய பிரான்ஸ் அதிபர் - ஈரானிய நடிகை காரணமா?

கடந்த ஆண்டு இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
மனைவியிடம் விமானத்தில் அடிவாங்கிய பிரான்ஸ் அதிபர் - ஈரானிய நடிகை காரணமா?
Published on

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோனை அவரது மனைவி விமானத்தில் வைத்து முகத்தில் அடித்து, தள்ளுவது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தன. இந்த வீடியோவிற்கு உலக தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இதற்கு ஈரானிய-பிரெஞ்சு நடிகையான கோல்ஷிப்தே ஃபாரஹானிதான் காரணம் என புதிதாக வெளியான புத்தகம் ஒன்றில் எழுதப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸ் மேட்ச் பத்திரிகையாளர் புளோரியன் டார்டிஃப் எழுதிய ‘ஆன் ஆல்மோஸ்ட் பெர்ஃபெக்ட் கப்பிள்’ (An (Almost) Perfect Couple) என்ற புத்தகம் சமீபத்தில் வெளியானது.

அந்த புத்தகத்தில் 48 வயதான அதிபர் மாக்ரோன், 42 வயதான ஈரானிய நடிகை ஃபாரஹானியிடம் குறுஞ்செய்தியில் ‘நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்’ என்று அனுப்பியதாகவும், அதை அவரது மனைவி பார்த்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு அதிபர் தரப்பும், நடிகை தரப்பும் மறுப்பு தெரிவித்துள்ளது. எலிசி அரண்மனை மற்றும் அதிபர் தம்பதியினர் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளனர். அது அவர்கள் இருவரும் சாதாரணமாக ‘விளையாடிக் கொண்டிருந்த ஒரு நெருக்கமான தருணம்’ மட்டுமே என்று விளக்கம் அளித்துள்ளனர்.

நடிகை கோல்ஷிப்தே ஃபாரஹானியும் அதிபருடன் தனக்கு இருந்ததாக கூறப்படும் உறவு வெறும் வதந்தி என்றும், தங்களுக்கிடையே "நெருக்கமான நட்பு" மட்டுமே இருந்ததாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com