

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் வழக்கறிஞர்கள் கூடும் உணவகத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
டமாஸ்கஸின் மையப்பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
உணவகம் நீதிமன்றத்திற்கு அருகில் இருப்பதால், அங்குப் பணிபுரியும் வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் மதிய இடைவேளையின் போது இங்கு கூடுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று உணவகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தபோது திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள், படுகாயமடையாதோரில் பெரும்பாலானோர் வழக்கறிஞர்கள் என தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தை சிரியப் பாதுகாப்புப் படையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையின்படி இது நாட்டுக் வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் போலத் தெரிவதாக டமாஸ்கஸ் மாகாண ஆளுநர் மஹேர் இட்லிபி தெரிவித்துள்ளார்.
கடந்த 2024 டிசம்பரில் அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சி கழிவிக்கப்பட்டு, கிளர்ச்சி குழு தலைவரான அகமது அல் ஷரா புதிய அதிபராக பொறுப்பேற்றார்.
இந்த ஆட்சி மாற்றத்தைப் பயன்படுத்தி ஐஎஸ்எஸ் பயங்கரவாத அமைப்பு மீண்டும் தங்களை அந்நாட்டில் வலுவாக நிறுவ முயற்சித்து வருகிறது. இந்த தாக்குதல் அவர்களின் செயலாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.