அமெரிக்கா பறிமுதல் செய்த ஈரான் கப்பலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: சீனா

அமெரிக்காவால் பறிமுதல் செய்த கப்பலில் ஏவுகணை தயாரிக்க பயன்படும் ரசாயணம் இருப்பதாக கூறப்படும் நிலையில், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என சீனா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா பறிமுதல் செய்த ஈரான் கப்பலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: சீனா
Published on

ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே "அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட கப்பல் சீனாவிலிருந்து ஈரானுக்குச் சென்று கொண்டிருந்தது. ஏவுகணைகளுக்கான ரசாயன பொருட்கள் ஏற்றுமதியுடன் தொடர்புடையது. நிறுத்துமாறு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான உத்தரவுகளை அது ஏற்க மறுத்தது. ஈரானின் ஆட்சியைத் தாங்கிப் பிடிக்க சீனா உதவுகிறது என்பதற்கு இது மற்றொரு நினைவூட்டல். இது புறக்கணிக்க முடியாத ஒரு யதார்த்தம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் பதில் அளிக்கையில் "எனக்குத் தெரிந்தவரை, இது ஒரு வெளிநாட்டு கொடி கொண்ட சரக்குக் கப்பல். எந்தவொரு தீய நோக்கமுள்ள தொடர்பையும் மிகைப்படுத்தலையும் சீனா எதிர்க்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமெரிக்கா சீனா மீது வரி உயர்வுகளை மேற்கொண்டால், சீனா பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்றார்.

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் காரணமாக ஈரான் துறைமுகத்தை முற்றுகையிடுவோம் என அமெரிக்கா தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு சென்ற ஈரான் கப்பலை அமெரிக்கா கடற்படை வழிமறித்து கைப்பற்றியது. அந்த கப்பலில் ஏவுகணைகள் தயாரிக்க பயன்படும் ரசாயணம் கண்டெய்னர் இருப்பதாக கூறப்படுகிறது. இது சீனாவில் இருந்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், சீனா பதில் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com