அமெரிக்கன் மியூசிக் அவார்ட்ஸ் விழாவில் BTS குழு சாதனை

அமெரிக்கன் மியூசிக் அவார்ட்ஸ் விழாவில் ஆண்டின் சிறந்த கலைஞர் பட்டத்தை BTS குழு வென்றது.
BTS won american musical award in las vegas
Published on

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற அமெரிக்கன் மியூசிக் அவார்ட்ஸ் விழாவில் உலகளாவிய சர்வதேச நட்சத்திரங்களை வீழ்த்தி, 'ஆண்டின் சிறந்த கலைஞர்' பட்டத்தை BTS குழு வென்றது.

கே-பாப் குழு, டெய்லர் ஸ்விஃப்ட், புருனோ மார்ஸ், பேட் பன்னி, லேடி காகா மற்றும் ஹாரி ஸ்டைல்ஸ் உள்ளிட்ட நட்சத்திர கலைஞர்களை வீழ்த்தி பிடிஎஸ் குழு சாதனை படைத்துள்ளது.

ஜின், சுகா, ஜே ஹோப், ஆர்.எம், ஜிமின், வி மற்றும் ஜங்கூக் ஆகியோரைக் கொண்ட ஏழு பேர் குழு, விருது வழங்கும் விழாவில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து இசைக் கலைஞர் ஆர்.எம் பேசும்போது, “ஆர்மீஸ்! நாம் மீண்டும் ஒருமுறை சாதித்துவிட்டோம். இது ரசிகர்களால் வாக்களிக்கப்படும் விருது.

எனவே, எப்பொழுதும் போல எங்களின் நன்றியும் பாராட்டும் உலகெங்கிலும் உள்ள எங்களின் ஆர்மிகளுக்கே உரித்தானது. கடந்த 13 ஆண்டுகளாக எங்களுக்கு துணையாக நின்றவர்கள் நீங்கள் தான்” என்று கூறினார்.

ஜே ஹோப் கூறும்போது, “இந்த ஆல்பத்திற்கு கிடைத்த வரவேற்பால் நாங்கள் திக்குமுக்காடி போயிருக்கிறோம். அரிராங் மற்றும் ஆல்பத்தில் உள்ள ஒவ்வொரு பாடலையும் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com