

அறுவை சிகிச்சையின் தந்தை என மகரிஷி சுஸ்ருதர் போற்றப்படுகிறார். இவர் சுஸ்ருத சம்ஹிதை என்ற மருத்துவ நூலை எழுதியுள்ளார். இந்த நூலின் மூலம் மனித உடலை ஆபரேஷன் வாயிலாக குணப்படுத்தலாம் என்பதை விளக்கியுள்ளார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோய்களுக்கான மருந்துகள் தயாரிப்பு குறித்து விவரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மகரிஷி சுஸ்ருதருக்கு பெருமை சேர்க்கும் வகையில், ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் வெண்கலச் சிலை சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது.
உலகின் மிக பழமைவாய்ந்ததும், புகழ்பெற்றதுமான 'ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் ஆப் எடின்பர்க்' என்ற மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
சுவாமிமலையில் தயாரான மகரிஷி சுஸ்ருதர் சிலை சுமார் 90 கிலோ எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.