

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை எந்தவொரு உடன்படிக்கையும் ஏற்படாமல் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் இந்திய நேரப்படி இன்று இரவு முதல் ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையிடப்படும். அமெரிக்க கப்பல்கள் முற்றுகையிட்டு அதன் வழியாக உலக நாடுகள் கப்பல்கள் போக்குவரத்து நடைபெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.
அதன்படி இந்திய நேரப்படி இன்றிவு 7.30 மணிக்கு முற்றுகை பணியை அமெரிக்கா தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் முடிவு குறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகையில் "அமெரிக்காவிடம் இருந்து நாங்கள் எந்த வேண்டுகோளையும் பெறவில்லை. அவர்கள் இரவே இந்த முடிவை அறிவித்துவிட்டு, தன்னிச்சையாக செயல்பட தொடங்கியுள்ளனர். இதில் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்ளப்படவில்லை.
பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுவதையும், மீண்டும் தொடங்குவதையும் நாங்கள் காண விரும்புகிறோம். இந்த மோதல் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அனைவருக்கும் ஹார்முஸ் திறக்கப்படுவதை காண விரும்புகிறோம். சர்வதேச சட்டத்தின்படி கடற்பயணம் சுதந்திரமாக நடைபெறுவதை காண விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.