நிலவுக்கு பயணம் மேற்கொண்ட 4 விண்வெளி வீரர்கள் நாளை பூமியில் தரையிறங்குகிறார்கள்

கடந்த 2-ந்தேதி ஓரியன் விண்கலத்தில் ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரர்களை அனுப்பியது.
நிலவுக்கு பயணம் மேற்கொண்ட 4 விண்வெளி வீரர்கள் நாளை பூமியில் தரையிறங்குகிறார்கள்
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசா, நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியை ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் மீண்டும் தொடங்கி உள்ளது.

இதில் கடந்த 2-ந்தேதி ஓரியன் விண்கலத்தில் ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரர்களை அனுப்பியது. இவர்கள் நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்தனர்.

பூமியில் இருந்து 406,771 கிலோமீட்டர் தொலைவில் பயணம் செய்து நிலவுக்கு மிக அருகில் சென்றனர். மேலும் நிலவின் பின்புறத்தை நேரில் பார்த்தவர்கள் என்ற சாதனையையும் படைத்தனர்.

ஆய்வுகளை முடித்து கொண்டு ஓரியன் விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்களும் பூமியை நோக்கி புறப்பட்டனர்.

அவர்கள் பயணிக்கும் ஓரியன் விண்கலம் நாளை பூமியில் தரையிறங்குகிறது. இந்திய நேரப்படி நாளை காலை 5.37 மணிக்கு பசிபிக் பெருங்கடலில் சான்டியாகோ கடற்கடை பகுதியில் தரையிறங்குவார்கள் என்று நாசா தெரிவித்து உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com