எதிர்காலத்தில் எங்களை சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் அமைச்சர்

பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேசன் சிந்தூரை இந்தியா நடத்திய ஒரு ஆண்டு ஆகும் நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் எங்களை சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் அமைச்சர்
Published on

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி பாகிஸ்தான் நாட்டிற்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இந்தியா பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் 4 நாட்கள் தொடர்ந்த நிலையில், மே 10-ந்தேதி ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

ஆபரேசன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டு நாளையுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் மீது எதிர்காலத்தில் ஏதாவது ஆக்கிரமிப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டால் தீவிரமான மற்றும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கவாஜா ஆசிஃப் கூறியதாவது:-

இன்று வான், நிலம் மற்றும் நீர் ஆகிய தளங்களில் பதிலடி கொடுக்கும் நமது திறன், எவருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில் பயனுள்ளதாகவும் வேகமானதாகவும் உள்ளது.

எதிர்காலத்தில் ஏதேனும் தவறான மதிப்பீடு ஏற்பட்டால், அதற்கான எதிர்வினை மிகவும் தீவிரமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

பாகிஸ்தான் வெறும் பதிலடி கொடுப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், அதன் விளைவுகளுக்கான சரியான போக்கையும் தானே தீர்மானிக்கிறது என்பதில் எவ்வித ஐயமும் இருக்கக்கூடாது. எங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு துணிச்சலான நடவடிக்கையும் [எதிர்தரப்பின் செயலுடன் மட்டும்] நின்றுவிடாது. அதன் போக்கு, அதன் தொடக்கம் மற்றும் அதன் முடிவு ஆகியவற்றை நாங்களே தீர்மானிப்போம்.

இவ்வாறு கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com