7000 ஆண்டு நாகரீகத்தை வெறும் 250 ஆண்டு வரலாறு கொண்ட அமெரிக்கா அழிக்கவே முடியாது.. டிரம்ப்க்கு ஈரான் பதிலடி

குழந்தைகளைக் கொல்வதையும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையும் கற்காலத்திலிருந்து நவீன உலகிற்குச் சுமந்து வந்தவர்கள் நீங்களே ஆவீர்கள்
7000 ஆண்டு நாகரீகத்தை வெறும் 250 ஆண்டு வரலாறு கொண்ட அமெரிக்கா அழிக்கவே முடியாது.. டிரம்ப்க்கு ஈரான் பதிலடி
Published on

நேற்று வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "ஈரானின் ராணுவ வலிமை ஏற்கனவே சிதைக்கப்பட்டுவிட்டது. அமெமெரிக்காவின் ராணுவ இலக்குகள் விரைவில் எட்டப்படும்.

அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் ஈரானின் முக்கியப் பகுதிகள் மீது மிகக் கடுமையானத் தாக்குதல்கள் நடத்தப்படும். ஈரான் மீண்டும் கற்காலத்திற்கு செல்லும்" என்று எச்சரித்தார்.

இதற்கு எதிர்வினை ஆற்றிய ஈரானிய புரட்சிகர காவல்படையின் ளபதி பிரிகேடியர் ஜெனரல் சையத் மஜித் மூசாவி, "ஹாலிவுட் பிரமைகள் உங்கள் மனதை பாதித்துள்ளன.

வெறும் 250 ஆண்டுகால வரலாற்றை வைத்துக்கொண்டு, 6,000 ஆண்டுகளுக்கு மேலான நாகரீகத்தை மிரட்டுகிறீர்கள்.

ஈரானின் திறன்களைப் பற்றி அமெரிக்காவுக்கு எதுவும் தெரியாது. உங்களின் கணிப்புகள் அமெரிக்காவை புதைகுழிக்குள் தள்ளும்" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "உங்கள் குண்டுவீச்சுகளால் நாங்கள் மீண்டும் கற்காலத்திற்குத் தள்ளப்பட மாட்டோம். நாங்கள் 7,000 ஆண்டுகால நாகரிகப் பாரம்பரியம் கொண்ட ஒரு தேசம். வரலாற்றுக்கு எங்களைப் பற்றி நன்கு தெரியும்.

தெளிவாகத் தெரிவது இதுவே, குழந்தைகளைக் கொல்வதையும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையும் கற்காலத்திலிருந்து நவீன உலகிற்குச் சுமந்து வந்தவர்கள் நீங்களே ஆவீர்கள்" என்று தெரிவித்துள்ளது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com