9 ஆண்டுகளுக்கு பிறகு.. மே 13 டிரம்ப் சீனா பயணம் - அதிபர் ஜி ஜின்பிங்குடன் சந்திப்பு

வருகிற 13 தேதி முதல் 15 தேதி வரை சீனாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
9 ஆண்டுகளுக்கு பிறகு.. மே 13 டிரம்ப் சீனா பயணம் - அதிபர் ஜி ஜின்பிங்குடன் சந்திப்பு
Published on

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகிற 13 தேதி முதல் 15 தேதி வரை சீனாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்து அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு சீனா செல்கிறார் அதிபர் டிரம்ப்.

தொடர்ந்து அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி மீதான முற்றுகையால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடி, மற்றும் தைவான் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இருநாடுகளுக்கிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் இந்தப் பயணம் நடைபெற இருக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்தின் போது அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து பொருளாதாரம் மற்றும் வர்த்தக பிரச்சனைகள் குறித்து இரு நாட்டு தலைவர்களுக்கும் விவாதிப்பார்கள் என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com