search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    389 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
    X

    389 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

    • 389 பயணிகள்,13 பணியாளர்களுடன் ஏர் கனடா விமானம் புறப்பட்டது.
    • தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    டொராண்டோ:

    கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீ சுக்கு 389 பயணிகள்,13 பணியாளர்களுடன் ஏர் கனடா விமானம் புறப்பட்டது.

    விமானம் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் அதில் உள்ள என்ஜின் வெடித்துச் சிதறியது. என்ஜின் பகுதியில் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், விமானிக்கு தகவல் தெரிவித்து உடனே விமானத்தை தரை இறக்குமாறு அறிவுறுத்தினர். விமானிகள் உடனடியாக விமானத்தை பத்திரமாக திருப்பி விமான நிலையத்தில் தரையிறக்கினர்.

    அங்கு தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். விமானிகள் சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை உடனே தரை இறக்கியதால் பயணிகள் தப்பினர்.

    இந்த சம்பவத்தில் யாரும் காயம் ஏற்படவில்லை. விமானத்தில் தீ பிடித்ததாக தகவல் தெரிந்தததும் பயணிகள் பதற்றம் அடைந்தனர். பின்னர் அசம்பாவிதம் ஏற்படாமல் விமானம் தரை இறக்கப்பட்டதால் நிம்மதி அடைந்தனர்.

    விமானம் புறப்பட்டதும் அடிப்பகுதியில் தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    Next Story
    ×