என் மலர்
உலகம்

ஜப்பான் கண்டுபிடிச்ச புது ரூட்.. இறந்தவர்களின் சாம்பலில் இருந்து ஒரே வருடத்தில் ரூ. 377 கோடி லாபம்
- சட்டப்படி எரியூட்டப்பட்டவர்களின் சாம்பலையும் அதில் இருந்து மிஞ்சிய எலும்புகளை மட்டுமே உறவினர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
- கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் அவ்வகை உலோகங்களை விற்று சுமார் 6.49 பில்லியன் யென் [சுமார் 76 கோடி ருபாய்] வரை நகரங்கள் சம்பாதித்துள்ளன.
இறந்தவர்களின் சடலங்களை எரியூட்டிய சாம்பலில் இருந்து எஞ்சிய உலோகங்களை விற்று ஜப்பானிய நகரங்கள் லாபம் ஈட்டுவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானில் வருடந்தோறும் சராசரியாக சுமார் 1.5 மில்லியன் மக்களின் சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. அந்நாட்டின் சட்டப்படி எரியூட்டப்பட்டவர்களின் சாம்பலையும் அதில் இருந்து மிஞ்சிய எலும்புகளை மட்டுமே உறவினர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் உயிரிழந்தவர்கள் உடலில் அணிந்தும், பொருத்தப்படும் இருந்த தங்கம் உள்ளிட்ட மிக்க உலோகங்கள் எரியூட்டப்பட்ட சாம்பலில் மிச்சம் இருக்கும். குறிப்பாக தங்களின் பற்களை அடைக்க [dental fillings] தங்கம், பலேடியம் உள்ளிட்ட உலோகங்களை மக்கள் பயன்படுத்துவதால் அந்த உலோகங்களின் எச்சங்களும், எழுப்புகளில் இம்பிளாட் ஆக பொருத்தப்பட்டிருக்கும் டைட்டானியம் உள்ளிட்ட உலோகங்களின் எச்சங்களும் சாம்பலில் அதிகம் மிஞ்சுகின்றன.
எனவே பல்வேறு ஜப்பானிய நகரங்கள் அதை சேகரித்து விற்று பணமாக்குகின்றன. ஜப்பானில் 97% சதவீத மயானங்களை அரசே நடத்தகுவதால் இதன் மூலம் பெரு நகரங்கள் அதிக லாபம் சம்பாதிக்கின்றன.
கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் அவ்வகை உலோகங்களை விற்று சுமார் 6.49 பில்லியன் யென் [சுமார் 377 கோடி ருபாய்] வரை நகரங்கள் சம்பாதித்துள்ளன. குறிப்பாக கியோடா நகரம் 303 மில்லியன் யென், யோகோஹாமா நகரம் 233 மில்லியன் யென், நகோயா நகரம் 225 மில்லியன் யென் சம்பாதித்துள்ளன.






