மனைவியின் பிறந்தநாளுக்கு 78 வயது முதியவரின் சிறப்பு பரிசு

பிறந்தநாளன்று கணவர் வழங்கிய சிறப்பு பரிசால் எல்லையில்லா ஆனந்தம் அடைந்த ஜேன், தனது காதல் கணவரை கட்டி அணைத்து முத்தமிட்ட காட்சிகளை அவர்களது மகள் கேட் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். வீடியோ இணையத்தில் வைரலாகி 37 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களை குவித்த நிலையில் பயனர்கள் பலரும் வயதான தம்பதிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
மனைவியின் பிறந்தநாளுக்கு 78 வயது முதியவரின் சிறப்பு பரிசு
Published on

காதல் தம்பதிகள் ஒருவர் மீது ஒருவர் அலாதி பிரியம் காட்டுவது இயல்பு என்றாலும், முதுமையிலும் அந்த அன்பு குறையாமல் இருப்பது சில தம்பதிகளிடம் மட்டுமே காணப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜோ கியோக். 78 வயதான இவர் தனது மனைவி ஜேனின் 73-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார். அதன்படி மனைவிக்கு மிகவும் பிடித்த ஜப்பானிய செர்ரி பிளாசம் மரத்தை வாங்கி பரிசளித்துள்ளார். பிறந்தநாளன்று கணவர் வழங்கிய சிறப்பு பரிசால் எல்லையில்லா ஆனந்தம் அடைந்த ஜேன், தனது காதல் கணவரை கட்டி அணைத்து முத்தமிட்ட காட்சிகளை அவர்களது மகள் கேட் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 37 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களை குவித்த நிலையில் பயனர்கள் பலரும் வயதான தம்பதிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com