இந்தோனேசியாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இன்று இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
இந்தோனேசியாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Published on

ஜகார்த்தா:

இந்தோனேசியாவில் இன்று இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கெபுலாவான் பதுவில் இன்று அதிகாலை நில நடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது.

நிலநடுக்கத்தால் வீடு, கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்துபடி வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

அதன் பின் சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இதனால் மக்கள் பெரும் பீதி அடைந்தனர்.

முதல் நிலநடுக்கம் 43 கி.மீ. ஆழத்திலும் 2-வது நிலநடுக்கம் 40.கி.மீ. ஆழத்திலும் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com