‘நெயில் பாலிஷ்’ செய்து மாதம் ரூ.10 லட்சம் வருமானம் ஈட்டும் பெண் கலைஞர்

கடந்த 6 வருடங்களுக்கு முன்பு துபாய்க்கு குடிபெயர்ந்து, நகக்கலை நிபுணராக தனது பணியை தொடங்கினார்.
பெண் கலைஞர்
Published on

சிறிய சுயதொழில் செய்தால் கூட அதனை விருப்பத்துடனும், திறமையாகவும் செய்யும் போது அதன் மூலம் அதிக பலன் கிடைக்கும் என்பதை உறுதிபடுத்துவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் வியட்நாமை சே்ரந்த நுயென் புவாங் ஆன் என்ற 32 வயதான இளம்பெண் ஒருவர் நெயில் பாலிஷ் செய்து மாதம் ரூ.10 லட்சம் வருமானம் ஈட்டுவதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் பதிவு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு துபாய்க்கு குடிபெயர்ந்து, நகக்கலை நிபுணராக தனது பணியை தொடங்கினார். புல்லா என்ற பெயரில் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற்ற அவர் இந்த தொழிலில் 12 வருட அனுபவம் பெற்றவர். அவரது திறமையை பார்த்து வாடிக்கையாளர்கள் குறிப்பாக இளைஞர்கள் பலரும் நெயில்பாலீசுக்காக சென்றனர். அதோடு கட்டணமும் குறைவாக இருந்ததால் நாள்தோறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதனால் அவர் ஜுமேரா வில்லேஜ் சர்க்கிள் பகுதியில் ஒரு அழகு நிலையத்தை தொடங்கினார். அதில் நல்ல வருமானம் கிடைத்தது. அதையே மீண்டும் மீண்டும் தொழில் முதலீடு செய்து வந்துள்ளார். இதன்மூலம் மாதம் ரூ.10 லட்சம் வரை சம்பாதிக்கிறார். அவர் கூறுகையில், நான் 50 வயதாகும் போது ஓய்வு பெறுவதற்குத் தேவையான வருமானத்தை ஈட்ட திட்டமிட்டுள்ளேன். எனவே நான் மேலும் முதலீடு செய்து கூடுதல் கிளைகளை தொடங்க விரும்புகிறேன். துபாயில் மட்டுமல்லாமல் அபுதாபி அல்லது புஜைரா போன்ற பிற அமீரகங்களிலும் சேர்த்து, 5 கிளைகள் வரை தொடங்கலாம் என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com